பாதசாரியை பலியெடுத்து மாயமான வாகன சாரதி
அநுராதபுரம் – மதவாச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக மதவாச்சி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
சம்பவத்தில் 39 வயதுடைய மதவாச்சி பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற வாகன சாரதியை கைது செய்ய மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.