1000 உக்ரேனிய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பிய ரஷ்யா: சிறையிலேயே இறந்த ஐவர்?
உக்ரைனின் 1000 வீரர்களின் உடலைகளை ரஷ்யா திருப்பி அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
மூன்று ஆண்டுகளைக் கடந்து உக்ரைன், ரஷ்யா இடையேயான சண்டை நீடித்து வருகிறது
கடந்த ஜூன் மாதம் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளின்போது ரஷ்யாவும், உக்ரைனும் பாரிய அளவிலான கைதிகள் பரிமாற்றத்திற்கும், தலா 6,000 வீரர்களின் உடல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் ஒப்புக்கொண்டன. இருப்பினும் இரு தரப்பில் இருந்தும் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் 1000 உக்ரைன் வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால், அவர்களில் ஐந்து பேர் ரஷ்ய சிறையிருப்பில் இருந்தபோது இறந்தனர் என கீவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்தான்புல் பேச்சுவார்த்தை
மேலும், இந்த பரிமாற்றம் இஸ்தான்புல் பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதி என்று உக்ரைனின் ஒருங்கிணைப்பு தலைமையகம் கூறியுள்ளது.
அதே சமயம் இந்த பரிமாற்றம் குறித்து ரஷ்யா இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
எனினும், TASS செய்தி நிறுவனம் பெயர் குறிப்பிடப்படாத ஆதாரத்தை மேற்கோள்காட்டி, ரஷ்யா தமது வீரர்களின் 19 உடல்களை திருப்பி அனுப்பியதாக செய்தி வெளியிட்டுள்ளது.