;
Athirady Tamil News

நாடாளுமன்றத்தின் உள்ளே உயிரை மாய்த்துக்கொண்ட இளம் எம்.பி – பின்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்

0

30 வயது எம்.பி பின்லாந்து பாராளுமன்ற கட்டிடத்தில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் எம்.பி உயிரிழப்பு
30 வயதான eemeli peltonen, கடந்த 2023 ஆம் ஆண்டு சமூக ஜனநாயக கட்சி சார்பில்(SDP) போட்டியிட்டு, முதல்முறையாக பின்லாந்து பாராளுமன்றத்திற்கு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் பாராளுமன்ற கட்டிடத்தின் உள்ளே அவர் தனது உயிரை மாய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மரணத்தை உறுதிப்படுத்திய நாடாளுமன்ற பாதுகாப்பு இயக்குநர் Aaro Toivonen, “பிரேத பரிசோதனை அதிகாரி இது தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், அறிக்கை வரும் இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது” எனக்கூறி மேலதிக தகவலை வழங்க மறுத்து விட்டார்.

18 வயதில் நகரசபையின் கவுன்சிலராக அரசியலில் நுழைந்த அவர், 22 வயதில் நகரசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

சில வாரங்களுக்கு முன்னர் அவர் கடைசியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு இருந்த சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதன் காரணமாக ஓய்வில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அவரின் மரணத்திற்கு பின்லாந்து பிரதமர் Petteri Orpo, பின்லாந்து ஜனாதிபதி Alexander Stubb உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவரின் இறப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், நாடாளுமன்றம் வெளியே உள்ள பின்லாந்து தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.