;
Athirady Tamil News

யாழில் இரவில் கைதான சந்தேக நபரின் காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி

0

சுன்னாகம் பகுதியில் 23ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 2 கிராம் ஹெரோயினை தனது காரில் வைத்திருந்தவேளை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.