பிரித்தானியா திரும்பும் இளவரசர் ஹரி: உருவாகியுள்ள எதிர்பார்ப்பு
இளவரசர் ஹரி, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி பிரித்தானியா திரும்ப உள்ளார்.
முக்கியமான நாள்
செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த தினம் ஆகும்.
அன்று WellChild விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஹரி பிரித்தானியா வருகிறார்.
WellChild தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளராக 17 ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார் ஹரி.
இதற்கிடையில், பிரித்தானியா வரும் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரரை சந்திப்பாரா என அவரது ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.