யாழில். ‘வியாக்ரன்’ நூல் அறிமுக விழா
இ.சு.முரளிதரனின் ‘வியாக்ரன்’ நூல் அறிமுக விழா கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலய அதிபர் கே.கே.தவகீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் த.லிங்கேஸ்வரன் வரவேற்புரையாற்றினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசிந்தாந்தத்துறைத் தலைவர் கலாநிதி த.செல்வமனோகரன் அறிமுக வுரை நிகழ்த்தியதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் கருத்துரை ஆற்றினார்.
சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி ஷாயினி வித்தியானந்தன் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் குறித்த நூலுக்கான ஓவியங்களை உருவாக்கியதுடன் இந்நூல் “ஜீவநதி கொமிக்ஸ்” இன் வெளியீடாக வெளிவந்தது.



