;
Athirady Tamil News

நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் ; மரியா கொரினா மச்சாடோ

0

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு
இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.

அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.

இந்நிலையில் எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறினார்.

அதில் கூறியதாவது:- எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.