;
Athirady Tamil News

அமெரிக்க இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிப்பு: பலர் உயிரிழப்பு, சிலரை காணவில்லை

0

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ராணுவ வெடிபொருள் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராணுவ வெடிபொருள் ஆலையில் வெடிப்பு
வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் டென்னசி பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான இராணுவ வெடிபொருள் உற்பத்தி ஆலையில் திடீரென சக்தி வாய்ந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பதுடன் சில தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பக்ஸ்நார்ட்(Bucksnort) என்ற நகருக்கு அருகே அமைந்திருந்த Accurate Energetic Systems-AES என்ற வெடிபொருள் உற்பத்தி ஆலையிலேயே இந்த வெடிப்பு சம்பவமானது பதிவாகியுள்ளது.

மீட்பு பணிகளில் சிக்கல்
வெடிபொருள் ஆலையில் தொடர்ந்து அடுத்தடுத்து வெடிப்புகள் நடைபெற்று வருவதால் மீட்பு படையினர் சம்பவ இடத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் மீட்பு பணிகள் மிகவும் தாமதமடைந்து வருவதுடன் காணாமல் போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் இருப்பதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த பயங்கர வெடி விபத்து சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில், அதில் அடர்ந்த புகை மற்றும் தீயுடன் கலந்து குப்பைகள் எரிவதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.