;
Athirady Tamil News

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

0

வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனஸ் அளித்த பரிசுப் புத்தகத்தில், அந்நாட்டு வரைபடத்தில் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் உள்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் வங்கதேசத்துடன் இணைக்கப்பட்டிருப்பதுபோல சித்திரிக்கப்பட்டிருந்தது.

வங்கதேசத்தின் தலைநகர் தாக்காவில் பாகிஸ்தான் ஜெனரல் சாஹித் சம்சாத் மிஸ்ராவுடன் வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனஸும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின்போது, ஆர்ட் ஆஃப் டிரையம்ப் என்ற புத்தகத்தை மிர்ஸாவுக்கு யூனுஸ் பரிசளித்தார்.

ஆனால், அந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த வங்கதேச நாட்டின் வரைபடத்தில் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களும் இருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையை யூனஸ் அவமதிப்பதாக பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரையில் எந்தவொரு கருத்தோ பதிவோ தெரிவிக்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.