;
Athirady Tamil News

பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்ட விஜய் – கொடுத்த வாக்குறுதிகள் என்ன?

0

தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்காமல் இருந்தது கடும் விமர்சனத்தை பெற்றது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறிய விஜய், விரைவில் நேரில் சந்திப்பதாக தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் வழங்குவதாக விஜய் தெரிவித்த நிலையில், அதனை அந்த குடும்பத்தினரின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

மேலும், விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுக்கபோவதாக அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

இதைத்தொடர்ந்து விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு, தவெக தரப்பில் இருந்து டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கரூர் செல்லும் திட்டத்தை கைவிட்டு, சென்னையில் வைத்து சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டார்.

விஜய் கொடுத்த வாக்குறுதிகள்

அதன்படி, கரூரில் இருந்துநேற்றே ஆம்னி பேருந்து மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

காலை 9 மணி முதல் உயிரிழந்த 37 பேரின் குடும்பங்களை சேர்ந்த 235 பேரை தனித்தனி அறைகளில் சந்தித்து அவர்களிடம் ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுடைய மருத்துவ செலவு, கல்விச் செலவுகளை ஏற்பதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், “சென்னைக்கு அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் உங்களை கரூரில் வந்து சந்திப்பேன்.

வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன்,. என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருவேன். உங்கள் இழப்பை என்னால் ஈடு செய்யவே முடியாது” என கண்கலங்கி வருத்தம் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.