;
Athirady Tamil News

யாழ்.இந்துவில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு

0

விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொலிஸாரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளை எதிரான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளின் தாக்கம் எவ்வாறு சமூக மத்தியில் ஏற்படுத்தப்பட்டுகிறது என்பது தொடர்பில் விழிப்புணர்வு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் மத்தியில் பாடசாலை அதிபர் , பொலிஸ் உயர் அதிகாரிகள் கருத்துரைகள் வழங்கினார்கள்.

அத்துடன் , விழிப்புணர்வு தெரு நாடக ஆற்றுகையும் நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.