;
Athirady Tamil News

போர் நிறுத்தம் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்

0

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

வியாழக்கிழமை (23) அன்று அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் லெபனான் தூதர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய 10 நாள் போர் நிறுத்தம், அடுத்த திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் அதைத் தொடர முடிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.