பிலிப்பின்ஸ் கேல்மெகி புயல் – தேசிய பேரிடராக அறிவிப்பு!
மத்திய பிலிப்பின்ஸை தாக்கிய கேல்மெகி புயல் காரணமாக சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இதனை தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டது.
பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளம் மற்றும் சூறைக்காற்றால் முடங்கியுள்ளது.
கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்திலிருந்து தப்பிக்க மக்கள் வீடுகள் மற்றும் கட்டடங்களின் கூரைகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். பெரும்பாலோர் மழை காரணமாக இடிபாடுகள், நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில், தேசியப் பேரிடராக பிலிப்பின்ஸ் அதிபர் ஃபெர்டினண்டு மார்கோஸ் அறிவித்தார்.