மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (18) மாலை 04.00 மணி முதல் நாளை (19) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை – பண்டாரவளை, ஹப்புத்தளை, ஊவா பரணகம, கந்தகெட்டிய
கொழும்பு – பாதுக்கை காலி – எல்பிட்டிய
களுத்துறை – வலல்லாவிட, புளத்சிங்கள, தொடாங்கொடை
கண்டி – கங்கவட கோரளை, உடுநுவர, உடபலாத்த, தும்பனை, பாத்தஹேவாஹெட, உடுதும்பர, கங்க மேல் கோரளை, பஸ்பாகே கோரளை, யட்டிநுவர
கேகாலை – ரம்புக்கனை, ருவன்வெல்ல, மாவனெல்லை, தெரணியகல, யட்டியந்தோட்டை, கலிகமுவ
மொனராகலை – பிபில நுவரெலியா -அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நோர்வுட், கொத்மலை
இரத்தினபுரி – கிரிஎல்ல, பலாங்கொடை, கலவானை, கொலன்ன
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை
பதுளை – ஹல்தும்முல்ல
களுத்துறை – மத்துகம
கேகாலை – அரநாயக்க,வரக்காப்பொல
இரத்தினபுரி – இம்புல்பே