;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பல்கலை மாணவன் செய்த மோசமான செயல் ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

0

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று(25) மாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை ஒழிப்பு பிரிவு
குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.