யாழில் மீனவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொன்னாலையை சேர்ந்த 63 வயதுடைய மீனவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிறுதொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
