யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரின் அறிவிப்பு 30.11.2025 மு.ப.10.00
யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் 9154 குடும்பங்களை சேர்ந்த 29439 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம், காரைநகர், நல்லூர், கோப்பாய், உடுவில், தெல்லிப்பளை, மருதங்கேணி, ஊர்காவற்றுறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 1196 குடும்பங்களைச் சேர்ந்த 3825 அங்கத்தவர்கள் 43 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
5543 குடும்பங்களை சேர்ந்த 17428 அங்கத்தவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 3 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.