நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரிப்பு
அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, காணாமல் போனோரின் எண்ணிக்கை 209 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஹட்டன் – வட்டவல, மாணிக்க தோட்டம் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.