;
Athirady Tamil News

எரிபொருள் பெற QR குறியீட்டு முறையா! அமைச்சர் விளக்கம்

0

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாத காரணத்தினால் எரிபொருள் விநியோகத்துக்கான QR குறியீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி நிலைமையின்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக முறை கடைபிடிக்கப்பட்டதால் எரிபொருள் விநியோகத்துக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாட்டில் போதுமான அளவுக்கு எரிபொருள் இருக்கிறது. எனினும் தேவை ஏற்பட்டால், QR குறியீடு முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை வளகுடா போர் பதற்றகளால் இலங்கை மக்கள் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.