;
Athirady Tamil News

தேவையை விட அதிக விநியோகம்: யாழ். குடாநாட்டின் 43 எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் வருகை

0
யாழ் குடாநாட்டில் உள்ள 43 எரிபொருள் விற்பனை நிலையத்திற்குமாக இரு நாட்களில் 3 லட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வழமையாக நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் லீற்றர் பெற்றோலும் 90 ஆயிரம் லீற்றர் டீசலும் தேவைப்படுகின்றது.
இருந்தபோதும் தற்போதைய ஈரானை மையம்கொண்ட மோதல் ஆரம்பித்த ஐயம் காரணமாக அதிக பெற்றோல் நுகர்வு காணப்படுகின்றது. இது அதிகரித்த பாவனை அல்ல. மாறாக அதகரித்த கொள்வனவாகவே காணப்படுகின்றது.
இந்த அதிகரித்த கொள்வனவு சேமிப்பை நோக்கமாக கொண்டு இடம்பெறுகின்றது. இருந்தபோதும் ஞாயிற்றுக் கிழமை குடாநாட்டிற்கு மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. திங்கள் கிழமை ஒரு லட்சத்து 95 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை களஞ்சியத்திற்கு எரிபொருள் எடுத்து வரப்படுகின்றது. விநியோகமும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றது எனத் தெரிவித்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.