;
Athirady Tamil News

காய்ச்சலில் காப்பாற்றியவர் இவரே ; விசித்திர திருமணம் செய்துக்கொண்ட பெண்

0

உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததாகவும் அதன்பின்னர் காய்ச்சல் குணமாகியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் மாற்றங்கள்
அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய அவர், இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்து இருந்தாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், பின்னர் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாரம்பரிய சடங்குகளுடன் கிருஷ்ணருக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வழக்கமான திருமண நிகழ்ச்சி போன்றே கிருஷ்ணர் சிலைக்கும், அந்த பெண்ணுக்கும் அவரது உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இந்நிலையில் நவநாகரீக உலகில் இன்றும் இவ்வாறான விநோத செயற்பாடுகள் இருக்கத்தான் செய்வதாக பலரும் கூறிவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.