கனடாவில் இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
கனடாவில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், பரே கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் (18) ஆகியோர் உயர் கல்வியைத் தொடர கனடாவுக்குச் சென்றிருந்தனர்.
குர்தீப் ஏற்கனவே படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நிலையில், ரன்வீர் மட்டும் படித்து வந்தார்.
இந்த நிலையில் இருவரும் நண்பரின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர். எட்மன்டனில் காரில் பயணித்தபோது மர்ம நபர்கள் சுட்டதில் இருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை குர்தீப்பின் நண்பரான அர்ஷ்தீப் சிங் அவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் கனடாவில் உள்ள பஞ்சாபி புலம்பெயர்ந்தோர் மக்கள் மத்தியில் கடும் கோபத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையின் ஒருபகுதியாக பல பஞ்சாபி இளைஞர்களை கனடா போலீஸார் அழைத்துச் சென்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.