தமிழர் பகுதியில் பயங்கரம்; கணவனை கொலை செய்த மனைவி
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த கொலைச் சம்பவம் இன்று (15) வாகனேரி குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா எனும் 46 வயதானவர்.
வாழைச்சேனை பொலிஸார் விசாரணை
இந்நிலையில் கணவனை கொன்ற மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் அன்றைய தினம் வயலுக்கு சென்று வீடு திரும்பியதும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.