;
Athirady Tamil News

லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; பறிபோன உயிர்

0

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவராவார்.

விபத்து தொடர்பில் லொறி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.