குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்
ஐந்து ஆண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் புதன்கிழமை (21) மதியம் 1 மணிக்கு இடம் பெற்றுள்ளது மஸ்கெலியா ப்ரௌன்லோ தோட்ட பு ப்ரௌன்லோ பிரிவில் பணி புரிந்து கொண்டு இருந்த வேளையில் அதிக உஷ்ணம் காரணமாக குளவி கூடு கலைந்து கொட்டியதில் ஆண் தொழிலாளர்கள் ஐவர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் தோட்ட நிர்வாகி தோட்ட வைத்தியர் மூலம் முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டனர்.