;
Athirady Tamil News

இஸ்ரேல் ஜனாதிபதி வருகையால் ஆஸியில் போராட்டங்கள் தடை

0

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்கள்மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிட்னி, போண்டி கடற்கரையில் டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு
யூத சமூகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியது. இந்நிலையில் தமது நாட்டுக்கு வருகை தருமாறு இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவுஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று எதிர்வரும் 8 ஆம் திகதி இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சக் அவுஸ்திரேலியா வருகின்றார். அவரின் வருகைக்கு பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் 12 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் ஜனாதிபதிஇ யூத சமூகத்தினருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.