;
Athirady Tamil News

குற்றமற்றவர் ; மலேசியாவில் மரண தண்டனையில் இருந்து தப்பிய பிரான்ஸ் இளைஞன்!

0

மலேசியச் சிறையில் வாடிய பிரெஞ்சுக்காரர் மரண தண்டனையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியாவில் போதைப் பொருள் வழக்கில் சிக்கி, மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த Tom Félix (டாம் ஃபெலிக்ஸ்) இறுதியில் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tom Félix நிரபராதி
மலேசியாவின் Langkawi தீவில் உணவகம் திறக்கத் திட்டமிட்டிருந்த இவர், போதைப் பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

மலேசியச் சட்டப்படி, போதைப் பொருள் கடத்தல் என்பது மிகக் கடுமையான குற்றமாகும். இதனால் இவருக்குத் தூக்குத் தண்டனையோ அல்லது மிக நீண்ட காலச் சிறைத்தண்டனையுடன், கடுமையான பிரம்படியும் கிடைக்கும் அபாயகரமான சூழல் நிலவியது.

ஆதாரங்கள் இல்லை இவர் தனது மலேசிய நண்பருடன் தங்கியிருந்த வீட்டின் பொதுவான இடத்தில் போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று Alor Setar உயர் நீதிமன்றம் (Haute Cour) தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவர் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தினரின் போராட்டம் முன்னாள் Veolia நிறுவன அதிகாரியான இவர், கடல்சார் உயிரியலில் தேர்ச்சி பெற்றவர்.

இவர் நிரபராதி என்று இவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வந்தனர். இவருடன் தங்கியிருந்த கூட்டாளியும், இவருக்கு இதில் தொடர்பில்லை என்று கூறியது பிரன்ஸ் நாட்டவருக்கு சாதகமாக அமைந்தது.

இந்நிலையில் மிக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, இப்போது அவர் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தயாராகிவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.