;
Athirady Tamil News

70 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட .Com டொமைன்

0

AI.com என்ற டொமைன் பெயரை சுமார் 70 மில்லியன் டாலருக்கு கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான Crypto.com-ன் இணை நிறுவனர் கிரிஸ் மார்சலெக், வாங்கியுள்ளார்.

சமீபத்தில், Crypto.com நிறுவனம் AI.com என்ற டொமைன் பெயரை 70 மில்லியன் டாலருக்கு வாங்கிய செய்தி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த ஒப்பந்தம் டொமைன் பெயர் விற்பனையில் ஒரு சாதனையை முறியடித்தது மட்டுமல்லாமல், 2019-ல் Voice.com 30 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட விற்பனைத் தொகையை விட இருமடங்காகவும் இருந்தது.

வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சந்தை
பொதுவெளியில் அறிவிக்கப்பட்ட டொமைன் விற்பனைகளிலேயே இதுதான் மிக அதிக விலையாகக் கருதப்படுகிறது. வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சந்தையில் தடம் பதிக்கும் நோக்கில் இந்த அதிரடி முதலீட்டை அவர் செய்துள்ளார்.

இந்த வார இறுதியில் நடைபெறும் ‘சூப்பர் பவுல்’ விளம்பரத்தின் போது AI.com அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.

இந்த தளம் பயனர்களுக்கு தேவையான செய்திகளை அனுப்பவும், செயலிகளை இயக்கவும் மற்றும் பங்குகளை வர்த்தகம் செய்யவும் உதவும் ஒரு தனிப்பட்ட “AI ஏஜென்ட்” ஆக செயல்படும். தொழில்நுட்ப அறிவு அதிகம் இல்லாத சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

“அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளை கணக்கில் கொண்டால், AI என்பது நம் வாழ்நாளின் மிகப்பெரிய தொழில்நுட்ப அலையாக இருக்கும்” என்று மார்சலெக் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த விற்பனை முழுவதுமே கிரிப்டோகரன்சி மூலம் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.