ட்ரம்பின் புதிய அழுத்தம் ; அதிரடி வரி விதிப்பால் ஆட்டம் காணும் உலக வர்த்தகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிற நாடுகளுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவிற்குச் சாதகமான நிலையை உருவாக்க மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் தற்போது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
தென்கொரியாவுடன் ஏற்கனவே எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின்படி, இறக்குமதி வரி 15 வீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது.
எனினும், தென்கொரியா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி, தற்போது அந்த வரியை மீண்டும் 25 வீதமாக அதிகரிக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளார் இதனால் ஹூண்டாய் (Hyundai) போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.
ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்தியா நிராகரித்ததை அடுத்து, இந்திய மருந்துப் பொருட்கள் மற்றும் உருக்கு (Steel) இறக்குமதி மீது 25 முதல் 50 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்தியா நிராகரித்ததை அடுத்து, இந்திய மருந்துப் பொருட்கள் மற்றும் உருக்கு (Steel) இறக்குமதி மீது 25 முதல் 50 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான வர்த்தக முறுகல் முற்றியுள்ள நிலையில், இறக்குமதி வரி 145 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்குக் கடுமையான வரி விதித்துள்ளதுடன், சில முக்கிய தாதுப் பொருட்களை (Rare earth minerals) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவும் தடை விதித்துள்ளது.
ஜப்பான், பிரேசில், கனடா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளும் ட்ரம்ப்பின் இந்த “அமெரிக்காவிற்கே முன்னுரிமை” (America First) என்ற கொள்கையினால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜப்பானின் வாகன இறக்குமதி வரி மீண்டும் 25 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்புகளால் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன. குறிப்பாக வாகனங்களின் விலைகள் 2000 முதல் 3000 டொலர்கள் வரை அதிகரித்துள்ளன.
இது அமெரிக்க நுகர்வோரையே நேரடியாகப் பாதிப்பதுடன், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பாரிய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அதிரடி நகர்வுகள் அமெரிக்க உற்பத்திகளை மேம்படுத்தும் எனக் கூறப்பட்டாலும், நடைமுறையில் இது நட்பு நாடுகளுடனான உறவை விரிசலடையச் செய்வதுடன் சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மையையே உருவாக்கி வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.