;
Athirady Tamil News

நாட்டில் மரக்கறி விலைகளில் அதிரடி மாற்றம்!

0

விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் இன்றைய விலைப்பட்டியலுக்கு அமைய, மரக்கறிகளின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன.

அதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு வவுனியாவில் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் 300 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலையில் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

கரட் ஒரு கிலோகிராம் வவுனியாவில் 330 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலையில் 200 ரூபாய்க்கும், நுவரெலியாவில் 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பீட்ரூட் ஒரு கிலோகிராம் நுவரெலியாவில் 180 ரூபாய்க்கும், வவுனியாவில் 200 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலையில் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் வவுனியாவில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கெப்பட்டிபொலையில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை கறிமிளகாய் நுவரெலியாவில் 500 ரூபாய்க்கும் கெப்பெட்டிபொலையில் 550 ரூபாய்க்கும், வவுனியாவில் 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியாவில் கடந்த வாரம் அதிக கேள்வி நிலவிய குடை மிளகாய் வகைகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று சிவப்பு குடை மிளகாய் ஆயிரத்து 850 ரூபாய்க்கும், மஞ்சள் குடைமிளகாய் இரண்டாயிரத்து 100 ரூபாய்க்கும், பச்சை குடை மிளகாய் ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.