;
Athirady Tamil News

இணைய வணிகம் பெயரில் பெண்ணிடம் 60 இலட்சம் மோசடி ; CID விசாரணை தீவிரம்

0

பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இணையதள வணிகத்தில் ஈடுபடுத்துவதாக தெரிவித்து, குறித்த பெண்ணிடம் சந்தேகநபர்கள் மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேகநபர்களில் ஒருவரது வங்கிக் கணக்குக்கு 61 இலட்சத்து ஐயாயிரத்து 600 ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட பெண் வைப்பிலிட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு தொகை பணத்தை வங்கிக்கணக்கு உரிமையாளரான சந்தேகநபர் எடுத்துக்கொண்டு, மற்றையவருக்கு ஏனைய பணத்தை பகிர்ந்தளித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம், இந்த மோசடி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.