;
Athirady Tamil News

நாவிதன்வெளி உப தவிசாளரின் முன்மாதிரி

0

நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும் நாவிதன்வெளி உப தவிசாளர் கு.புவனரூபன் இம்முறை தனது ஏழாவது மாத கொடுப்பனவை வீரச்சோலை பகுதியில் உள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைத்தார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏழாவது மாதாந்த கொடுப்பனவை குறித்த குடும்பத்திற்கு வழங்கி உதவி ஏனையோருக்கு முன்மாதிரியாக செயற்பட்ட அவர் நாவிதன்வெளி உப தவிசாளர் பதவியில் உள்ள வரை தனது அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்ம சேவைக்கு வழங்கப் போவதாக இதன்போது உறுதி அளித்தார்.

மேலும் ஏற்கனவே உறுதி அளித்த படி தனது இதர கொடுப்பனவுகளையும் இதே போன்று வயது முதிர்ந்தோர் இளைஞர் யுவதிகள் மற்றும் மாணவர்களின் கற்றல் செயற்பாடு உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு வழங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.