;
Athirady Tamil News

பொலிவிய விமான விபத்தில் 15 பேர் பலி

0

பொலிவிய விமானப்படை சரக்கு விமானம் ஒன்று நாட்டின் மேற்கு நகரமான எல் ஆல்டோவில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அந் நாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை (27) உள்ளூர் நேரப்படி மாலை 6:20 மணிக்கு (22:20 GMT) சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகிலுள்ள மோட்டார் பாதையில் இருந்த வாகனங்கள் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

You might also like

Leave A Reply

Your email address will not be published.