;
Athirady Tamil News

வளைகுடா நாடுகளின் வங்கிகள் தாக்கப்படும்! – ஈரானின் அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்!

0

வளைகுடா நாடுகளின் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு வங்கி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவத்தின் கூட்டுத் தலைமையான கதம் அல்-அன்பியா புதன்கிழமை (மார்ச் 11) அறிவித்துள்ளது.

ஈரான் படைகளின் இந்த அறிவிப்பால், பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை, சௌதி அரேபியா மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.