;
Athirady Tamil News

இஸ்ரேல் அணு சக்தி மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்

0

அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் நாட்டில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தை தாக்கியதாக ஈரானின் அணுசக்தி அமைப்பு நேற்று தெரிவித்து இருந்தது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதை ஈரானிய ஊடகங்களும் உறுதி செய்தன.

எனினும், இந்தத் தாக்குதலால் கதிர்வீச்சு அபாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமானோ நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணையை கொண்டு ஈரான் நடத்திய தாக்குதலில், அணுசக்தி மையத்தை சுற்றிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமையான வீடுகள் இடிந்துள்ளது. மேலும் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.100 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.