;
Athirady Tamil News

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது எரிபொருள் கப்பல்

0

இந்திய அரசாங்கத்தின் விசேட ஒத்துழைப்புடன் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் இன்று பிற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்று பிற்பகல் 1.30க்கு எரிபொருளை ஏற்றிய ஹரி ஆனந்த என்ற கப்பல் துறைமுறைகத்தை வந்தடைந்ததாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் கையிருப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் விளைவாக, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு இந்த எரிபொருளை வழங்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் வெவ்வேறு நாடுகளில் இருந்து 10 எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய டீசல் கையிருப்பு, ஏப்ரல் நடுப்பகுதி வரை போதுமானது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜூன் மாதம் வரை விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பெற்றோலும் போதிய கையிருப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.