;
Athirady Tamil News

4 விண்வெளி வீரர்களுடன் நிலவை நோக்கி புறப்பட்ட அமெரிக்க விண்கலம்

0

வாஷிங்டன்,

அமெரிக்காவும், ரஷியாவும் கடந்த நூற்றாண்டில் நிலவு குறித்த ஆய்வில் தீவிரம் காட்டின. மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளையும் மேற்கொண்டன. அதன்பின், இரு நாடுகளும் நிலவு குறித்த ஆய்வுகளை கைவிட்டன.

இந்நிலையில், 53 ஆண்டுகளுக்குப்பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மீண்டும் கையில் எடுத்துள்ளது. நிலவில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்துதல், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி மையமாக நிலவை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அதன்படி, ஆர்டெமிஸ் – 2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. 3 அமெரிக்க விண்வெளி வீரர்கள், ஒரு கனடா விண்வெளி வீரர் என 4 பேருடன் நாசாவின் ஓரியன் விண்கலம் சக்திவாய்ந்த எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தில் பயணிக்கும் 4 விண்வெளி வீரர்களும் நிலவில் மனிதர்கள் இதுவரை செல்லாத பகுதிக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.