;
Athirady Tamil News

அமெரிக்காவின் அதிரடி உத்தரவால் 13 ஆயிரம் அகதிகள் தவிப்பு

0

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளை, அவர்கள் ஒரு போதும் சென்றிராத 3-வது நாடுகளுக்கு நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆப்கானிஸ்தான், வெனிசுலா, கியூபா உள்ளிட்ட நாடுகளிலிருந்து தப்பி வந்த சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளனர்.

குறிப்பாக, ஸ்பானிஷ் மொழி பேசும் லத்தீன் அமெரிக்கர்களை ஆப்பிரிக்க நாடான உகாண்டாவுக்கும், ஆப்கானிஸ்தான் அகதி களை ஹோண்டுராஸூக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தொடர்ந்து அவர்களின் சட்டப்பூர்வ வேலை அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர்.

அகதிகளை தானாகவே சொந்த நாடுகளுக்குத் திரும்ப வைப்பதற்கான ஒரு தந்திரமான செயல் என மனித உரிமை ஆர்வலர் கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், இந்த விசித்திரமான நாடு கடத்தல் உத்தரவால் பல்லாயிரக்கணக்கானோரின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.