;
Athirady Tamil News

நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி ; கடும் போக்குவரத்து நெரிசல்

0

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு நெரிசல்
எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.