கொழும்பு மாநகர சபையில் வெடித்த மோதல் ; ஒருவர் வைத்தியசாலையில்
கொழும்பு மாநகர சபையின் இரு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகள் ஆரம்பம்
சம்பவம் தொடர்பாக கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் மாநகர சபை உறுப்பினர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.