;
Athirady Tamil News

தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்

0

கம்பஹா சீதுவை – கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
கொட்டுகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீகொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.