;
Athirady Tamil News

ஹார்மூஸ் பிரச்சனையை தீர்க்க பிரான்ஸ், பிரிட்டன் புதிய முன்னெடுப்பு

0

ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடக்கூடாது, ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடாது என அமெரிக்கா சில நிபந்தனைகளை விதித்தது.

இதில் இரு நாடுகளுக்கு இடையேயும் உடன்பாடு ஏற்படவில்லை.இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எரிபொருள் வர்த்தகம் சீராகும் என உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், பேச்சுவார்த்தை தோல்வி ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஹார்மூஸ் பிரச்சனையை தீர்க்க பிரான்ஸ், பிரிட்டன் புதிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க உலக நாடுகளை ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. மத்திய கிழக்கில் பதட்டங்களைக் கையாள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கையாகும். பிரான்சும், இங்கிலாந்தும் வரும் நாட்களில் ஒரு மாநாட்டை நடத்தும்.பன்னாட்டு அளவிலான முன்னெடுப்பிற்கு பிரான்சும், இங்கிலாந்தும் கூட்டாகத் தலைமை தாங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.