;
Athirady Tamil News

விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஏன்?

0

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென மீண்டும் திரும்பப் பெறப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 104 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து, முதல்வருக்கு வழங்கப்படும் கான்வாய் பாதுகாப்பு விஜய்க்கு உடனடியாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இரு நாள்களாக விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு, புதன்கிழமை இரவில் திடீரென விலக்கப்பட்டது. தவெகவின் பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரையிலுள்ள வீட்டுக்கு விஜய் செல்லும்போது, கான்வாய் பாதுகாப்பின்றி தனியாகவே சென்றார்.

விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக முன்னிருந்தாலும், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இடங்களை (118) விஜய் இன்னும் பெறாததால், முதல்வருக்கு வழங்கப்படும் கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

இதனிடையே, திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைப்பதாகவும், அதனால்தான் விஜய்யின் கான்வாய் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இருப்பினும், தவெக ஆட்சியமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.