;
Athirady Tamil News

நைஜீரியா: அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பலி

0

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐஎஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை, இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் நைஜீரியா பாதுகாப்புப்படையுடன் இணைந்து அமெரிக்க படைகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நைஜீரியாவின் புரோனா மாகாணத்தில் அரசுப்படையுடன் இணைந்து அமெரிக்க படையினர் நேற்று இரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் அபு பகர் அல் மனுகி உயிரிழந்தார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் மனுகி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.