;
Athirady Tamil News

அமெரிக்காவில் நண்பர்களுடன் சென்ற இந்திய இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்

0

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் பெண் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தெலுங்கானா  சேர்ந்த இளம்பெண் ஒருவர் அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த நிலையில், தனது நண்பர்களுடன் சிறியரக வேனில் பயணித்த சந்தர்ப்பத்தில்  குறித்த வேன் பாரிய விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மாணவி உட்பட 7 பேரும் படுகாயமடைந்ததாகவும்,  உடனடியாக 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்திய இளம் பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த யுவதியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அரசாங்கம்  நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.