;
Athirady Tamil News

காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று ; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

0

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் நடவடிக்கை
இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், கடலில் பயணிக்கும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வெளியாகும் வரை குறித்த கடற்பிராந்தியங்களுக்குள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் வானிலை அறிவிப்புகளை அவதானித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.