;
Athirady Tamil News

200 கோடி சொத்து …இணைய தளத்தில் மணமகள் தேடிய நபர்; போட்டி போட்ட பெண்களுக்கு காத்திருந்த ஷாக்

0

திருமண இணைய தளம் ஊடாக 18 இளம்பெண்களை ஏமாற்றிய ‘கில்லாடி’ கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் திருமண இணைய தளம் ஊடாகவே பலரும் தங்கள் வாழ்க்கை துணைகளை தேடி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவின் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் உன்றஜாவாரத்தை சேர்ந்தவர் வெங்கட காமேஷ். இவர் திருமண இணைய தளங்களில் 200 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், திருமணத்திற்கு பெண் வேண்டும் என்று பதிவு செய்தார்.

ஏராளமான இளம்பெண்கள் வெங்கட காமேஷை தொடர்பு
இதனை கண்ட தகவல் தொழில்நுட்ப துறை பிரிவில் வேலை செய்யும் ஏராளமான இளம்பெண்கள் வெங்கட காமேஷை தொடர்பு கொண்டனர். அவரை தொடர்பு கொண்ட இளம்பெண்களை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.

அவசர தேவைக்காக பணம் தேவைப்படுவதாக கூறி ஒவ்வொருவரிடமும் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றார். அந்தப் பணத்தை கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டார். வெங்கட காமேஷிற்கு பணம் கொடுத்த இளம்பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்.

ஆனால் அவர் திருமணம் செய்து கொள்வதாக நாட்களைக் கடத்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் சைபராபாத் பொலிஸ் புகார் செய்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து வெங்கட காமேஷை கைது செய்தனர். வெங்கட காமேசால் ஏமாற்றப்பட்டவர்கள் பொலிஸ் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்தனர்.

பொலிஸார் அறிவித்த சில மணி நேரங்களிலேயே 18 இளம்பெண்கள் வெங்கட காமேஷ் மீது புகார் அளித்தனர். வெங்கட காமேஷால் பாதிக்கப்பட்ட மேலும் பல புகார் தெரிவிப்பார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.