;
Athirady Tamil News

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் விலக முடிவு: இன்று அறிவிக்கிறார்?

0

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து கெய்ர் ஸ்டார்மர் விலக முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று அறிவிக்கிறார்.

இங்கிலாந்தில் 14 ஆண்டுகால கன்சர் வேடிவ் கட்சி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது அவர் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.

ஸ்டார்மர் பதவியேற்ற சில மாதங்களிலேயே பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டது. நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தது. பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு மக்களை வாட்டியது. உதவித்தொகை ரத்து வலதுசாரி அமைப்புகளால் தூண்டப்பட்ட கலவரங்கள் நாட்டின் சட்டம்-ஒழுங்கை கேள்விக்குறியாக்கின.

செல்வாக்கு சரிவு
தொழிலாளர்களின் மீது வரி விதிக்கப்படாது என்ற வாக்குறுதிக்கு மாறாக, சில வரிகள் உயர்த்தப்பட்டது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கருத்துக்கணிப்பில், எம்.பி.க்களிடையே அவரது ஆதரவு நிலை -51 என்ற மிக மோசமான நிலைக்குச் சென்றது. 1977-க்கு பிறகு மிகக் குறைந்த ஆதரவு பெற்ற பிரதமராக அவர் கருதப்பட்டார். கடந்த மே மாதத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தொழிலாளர் கட்சி வரலாறு காணாத தோல்விகளைச் சந்தித்தது.

இதுவே அவரது தலைமைக்கு எதிரான முதல் பெரிய எச்சரிக்கையாக அமைந்தது. தொழிலாளர் கட்சியில் ஸ்டார்மருக்கு மாற்றாக மான்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பார்க்கப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மேக் கர்பீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் போட்டியிட்டு 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

பதவி விலக முடிவு
இந்தநிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (திங்கட்கி ழமை) தனது ராஜினாமாவை அறிவிக்கக்கூடும் என்று ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், அவரது அலுவலகம் இதை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட பெரும் தோல்வி மற்றும் அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த மூத்த மந்திரிகள் பலர், அவரை பதவியிலிருந்து விலகக் கோரி அழுத்தம் கொடுத்து வரும்நி லையில் அவர் பதவிவிலகுவார் என தெரிகிறிது.

மான்செஸ் டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.