;
Athirady Tamil News

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

0

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி உடல்நலக்குறைவால் தனது 61ஆவது வயதில் இன்று (21) காலமானார்.

சுகவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சுமார் இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பிற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார் | Member Of Parliament Jayanandamurthy Passes Away

அரசியல் மற்றும் சமூக சேவைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த ஜெயானந்தமூர்த்தி, மட்டக்களப்பு மக்களின் நலன் தொடர்பான பல்வேறு விடயங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு அரசியல், சமூக மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, 1965 செப்டம்பர் 16 ஆம் திகதி மட்டக்களப்பில் பிறந்து ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

இதையடுத்துத் தொடர்ச்சியாக ஊடகங்களில் பணிபுரிந்த இவர், 2004 ஏப்ரல் 04 இல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மூலமாக விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் இவரும் ஒருவராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் 44,457 விருப்பு வாக்குகள் பெற்றுச் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி, நாடாளுமன்றத்திற்குத் தெரிவான நிலையில் வடகிழக்கிலிருந்து தெரிவான 22 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.