;
Athirady Tamil News

நஷ்டஈடு கொடுக்கச் சென்றவர் கொலை; சம்பவத்தால் அதிர்ச்சி

0

காலி அஹங்கம பகுதியில் பயிர்களை கால்நடை நாசம் செய்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய கால்நடைகள், மற்றொருவரது பயறு தோட்டத்தை சேதப்படுத்தியதற்காக, அவருக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர் சந்தேகநபர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட சந்தேகநபரும் அவரது சகோதரரும் இணைந்து, நஷ்டஈடு வழங்கச் சென்றவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாக உள்ள சந்தேகநபர் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.